முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியினை அனுஷ்டித்த கனேடிய பிரதிநிதி
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கனடாவின் (Canada) சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட்டினாளின் (Mark Holland) அலுவகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அர்த்தமற்ற வன்முறை
குறித்த பதிவில் ''தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கையில் ஆயுதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதோடு, கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இந்த அர்த்தமற்ற வன்முறையின் தாக்கத்துடன் தொடர்ந்து வாழ்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
On Tamil Genocide Remembrance Day, we honour the victims in Mullivaikkal and the armed conflict in Sri Lanka, and stand with Tamil communities in Canada and around the world who continue to live with the impact of this senseless violence. pic.twitter.com/s0eMGirJKc
— Mark Holland (@markhollandlib) May 18, 2024
அத்துடன், இறுதி போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணையுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவும் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |