பிரான்ஸில் எரிக்கப்பட்ட சிறிலங்கா தேசிய கொடி! (காணொளி)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சிறிலங்காவின் தேசிய கொடி பிரான்ஸில் 'தமிழர் படை' என்ற அமைப்பால் எரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 18/05/2022 அன்று பாரிஸ் நகரில் தமிழின அழிப்பு நினைவுநாள் பிரான்சு வாழ் மக்கள் அணிதிரள பேரணியாக நடைபெற்றது.
இந்த நினைவேந்தலில் தமிழீழ மக்களின் தேசியக்கொடியை பயன்படுத்த பிரஞ்சு காவல் துறை தடைசெய்தது.
குறித்த நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டால் நிகழ்வை கலைக்க நேரிரும் என்றும் பிரஞ்சு காவல்த்துறை எச்சரித்தன.
இந்த நிகழிச்சி நிரலுக்கு பின்னால் பிரான்சில் உள்ள ஶ்ரீலங்கா தூதரகம் இருந்துள்ளது என்றும்இ தமிழீழத் தேசியக் கொடியை பயங்கரவாதிகளின் கொடி என்று தவறான விழக்கத்தை பிரஞ்சு அரசுக்கு ஶ்ரீலங்கா தூதரகம் வளங்கியுள்ளது என்றும் குற்றம் சுமாத்திய தமிழ் அமைப்புக்கள் இந்த நிகழ்விற்கு பதிலடி கொடுப்பதற்காக நேற்று நள்ளிரவு. பாரிஸில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா தூதரகத்தின் கொடி இறக்கப்படு தமிழீழத் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள். .
மேலும் 'எமது தமிழீழ அழிப்பு நாளின் போது எமது தமிழீழத் தேசியக் கொடியை பயன்படுத்த விடாது செய்தமைக்கான பதிலடி' என்று கடிதம் ஒன்றும் எழுதிவைக்கப்படது.
"இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட எமது தேசியக்கொடியை எந்தவிடாமல் தடுக்க முயற்சிக்கிறீர்கள் இருந்தும் இன்று நாம் தடைகளை மீறி எமது தேசிய கொடியை ஏந்தினோம்" என குறித்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
