தமிழர்களுக்கு தோள்கொடுக்குமா பிரித்தானிய அரசாங்கம் -..! டேவிட் லமி விடுத்துள்ள கோரிக்கை
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை நினைவுகூர்வதற்கான தருணம் இது என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலாளர் அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆம் முண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “உண்மை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்றவற்றிற்கான தேடல்களின் போது யுத்தக் குற்றத்திற்கான நீதி முன்னகர்த்தப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகவே முள்ளிவாய்க்கால் அமைந்துள்ளது.
டுவிட்டர் பதிவு
Today is Mullivaikkal remembrance day, a time to remember the human rights injustices that took place 14 years ago against the Tamil people in Sri Lanka.@UKLabour remains committed to securing justice for the victims who lost their lives, survivors and their families. pic.twitter.com/nezGQZwrSL
— David Lammy (@DavidLammy) May 18, 2023
பிரித்தானியாவிலும், உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் பங்களிப்போடு இலங்கையின் தமிழ்ச் சமூகங்களுக்கு தேவையான அமைதியையும், அரசியல் உறுதிநிலையையும் கட்டியெழுப்ப முடியும்.
உயிர்ப்பலி கொள்ளப்பட்டோருக்கும், உயிர்தப்பியோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தொழிற்கட்சி உறுதி பூண்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைக்கு அமையக் குற்றம் இழைத்தோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதை கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் தோளோடு தோள் நிற்க வேண்டும்” - என்றார்.
