சிவப்பு - மஞ்சள் வர்ணத்தில் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி மண்
இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவேந்தல் இன்றாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
அந்தவகையில் கிளிநொச்சி - வட்டக்கச்சி (Vaddakkachchi) கட்சன் வீதி சந்தியில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிவப்பு மஞ்சள் நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவு பாடல்களை இசைக்கவிட்டபடி இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வு வட்டக்கச்சி மகாவித்தியாலயலயத்திற்கு அண்மையில் இடம்பெறுகின்றது.
மே 18 தமிழின அழிப்பின் பதினாறாம் ஆண்டு நிறைவை மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் அனுஷ்டிக்க மக்கள் அணிதிரள்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







