தமிழ் இனப்படுகொலை - பிரித்தானிய அரசிற்கான வலியுறுத்தல்; ஆரம்பமானது சர்வதேச பிரசாரம்!
இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்குமாறு பிரித்தானிய அரசிற்கு வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
இதேவேளை, உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஒட்டாவா தமிழ்ச் சங்கம் என்பனவும் இந்த பிரசாரத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கு வலியுறுத்தல்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து, இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்குமாறு, பிரித்தானிய அரசை வலியுறுத்தும் நோக்கில், சர்வதேச பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
பிரித்தானிய பிரதமருக்கான நகல்
இவ்வாறான நிலையில், இந்த பிரசாரத்தில் மேலும் பல அமைப்புகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 750க்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய மனுவின் முதற்கட்ட நகல் பிரித்தானிய பிரதமருக்கு அனுப்பப்பட்டு இந்த கையெழுத்து இயக்கம் தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
