வாகன இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்ட திட்டம்
இலங்கை அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாகன இறக்குமதி மூலம் இந்த வருடம் 650 பில்லியன் ரூபாய் வருமானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதுவரை வாகன இறக்குமதி மூலம் 450 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்துக்கான பாதீடு
அத்துடன், அடுத்த வருடத்துக்கான பாதீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமையால் தற்போதுள்ள வரிகள் திருத்தப்பட வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் கோரிக்கை அடுத்த வருட பாதீட்டில் பரிசீலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வாகன இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
