மும்பை தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்! அவிழ்க்கமுடியா மர்மத்தை நிகழ்த்துகிறதா இந்தியா
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உளவுப்பிரிவு தலைவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவனான பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் வசித்துவந்த 70 வயதான பயங்கரவாதி அசிம் சீமா என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன.
தாக்குதல்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்ததுடன் தாக்குதல் நடத்திய ஒன்பது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளதுடன் ஹபீஸ் சயது தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதி
இதனிடையே, மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.
துப்பாக்கியால் சுட்டும் மற்றும் விஷம் கொடுத்தும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பயங்கரவாதி உயிரிழந்தமைக்கும் இந்தியாவுக்கு தொடர்பு இருக்குமா என பலதரப்பிலிருந்து சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |