கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிடப்பட்ட ஐவர்! விசாரணையில் வெளிவந்த தகவல்
விசாரணைகளில் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களால் திட்டமிடப்பட்டது என தெரியவந்தள்ளது.
தற்போது காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில் இது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, தரூன், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய சமிந்து தில்ஷான் ஆகியோர் இந்தக் கொலையின் மூளையாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ கொலை சம்பவம்
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை நீதான் நீதிமன்றில் வைத்து முக்கிய பாதாள உலக குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்போது, தப்பிச் சென்ற சமிந்து தில்ஷான் என்ற துப்பாக்கிதாரி அன்றையே தினமே கைது செய்யப்பட்டிந்தார்.
எனினும், நீதிமன்றினுள் துப்பாக்கிதாரிக்கு உதவிய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், எட்டு மாதங்களின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 9 மணி நேரம் முன்