இன்று இரவு கோர சம்பவம் - மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்ட 29 வயது இளைஞன்
அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் இன்று இரவு (14) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உயிரிழந்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு சிறுவர்கள்
[5AEHO7]
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

