காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு - அடித்து கொல்லப்பட்ட முதியவர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
கல்னேவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் ஆணொருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
நெற்காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் மற்றும் ஆண் ஒருவர் தாக்கப்பட்டதிலேயே ஆண் உயிரிழந்துள்ளதுடன், பெண் படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதில் 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதுடன், 65 வயதுடைய மனைவி காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த ஆண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி