குடும்பத் தகராறில் கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொன்ற மனைவி!
தென்னிலங்கையில் குடும்பத்தகராறு காரணமாக கணவனை மனைவி படுகொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு மாவட்டம், நவகமுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணால பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததோடு, மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி, கையில் வைத்திருந்த கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படுகொலை காயமடைந்த கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய மொரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதியினர் கடந்த இரண்டு மாதங்களாக மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள வாடகை விடுதி ஒன்றில் வசித்து வந்ததாகவும், இதுவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நவகமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.