கொழும்பில் பல்கலை துணைவேந்தர்கள் படுகொலை : ரில்வின் சில்வாவிடம் விசாரிக்குமாறு சிஐடிக்கு சவால்
டிசம்பர் 2006 இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனது தொடர்பாக பிள்ளையான்(pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka), குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை நிரூபிக்கும் பொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் , கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது கிளர்ச்சியின் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரரத்ன படுவதவிதானே ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ரில்வின் சில்வாவிடம் விசாரிக்குமாறு சிஐடிக்கு சவால்
இந்த இருவர் படுகொலைகளையும் அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.
அந்தக் கொலைகள் குறித்து ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் விசாரிக்குமாறு சிஐடிக்கு அவர் சவால் விடுத்தார்.
தேர்தல் ஆணைக்குழு மீதும் குற்றச்சாட்டு
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட முறைப்பாடுகள் மீது தேர்தல் ஆணைக்குழு (EC) நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணி (URF) தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
