பிறப்பு முதல் முருகன் செய்த அதிசயங்கள்! வியக்க வைக்கும் உண்மை சம்பவங்களை கூறும் வேல்முருகன்
முருகன்
தனது பிறப்பு முதல் தற்சமயம் வரை முருகன் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார் என பின்னணி பாடகர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.
முருகப் பெருமானுடைய வேலை குளிப்பாட்டும் போது அந்த கோவிலில் தான் பிறந்ததாகவும் இதனால் கோவிலில் வைத்தே தனக்கு வேல்முருகன் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது மட்டுமன்றி தனது முதல் படமும் சுப்ரமணியம் என முருகனின் நாமத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததாகவும் கூறினார்.
முருகன் நிகழ்த்திய அதிசயங்கள்
மேலும், தான் திருவிழாவில் பிறந்ததன் பிரதிபலிப்பாக தனது முதலாவது பாடல் "மதுரை குலுங்க குலுங்க" என்று அமைந்ததாகவும் தெரிவித்தார்.
விருதாச்சலத்தில் உள்ள குளஞ்சியப்பர் முருகன் கோவிலில் தான் தனது திருமணம் இடம்பெற்றதாகவும் திருமணம் முடிந்து வீடு செல்லும் வழியிலேயே தனக்கு முதலாவது திரைப்பட பாடல் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறி பெருமிதம் கொண்டார்.
அதுமட்டுமல்லாது, ஆண் குரலில் தான் மட்டுமே கந்தசஸ்டி கவசம் பாடல் படியதாகவும் இதற்கு அடியெடுத்து கொடுத்தது முருகன் தான் எனவும் கூறிக்கொண்டார்.
ஒருமுறை சுலமங்கலம் சகோதரிகளின் கந்தசஸ்டி கவசம் பாடலை தான் கேட்டுக்கொண்டிருந்த போது இப்படி என் நீ பாடக்கூடாது என்பது போல் முருகனே சொன்னதுபோல் தோன்றியதாகவும் இதனால் தான் கந்தசஸ்டி கவசம் பாடல் படியதாகவும் குறிப்பிட்டார்.
தனது பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது முருகனை நினைத்து விபூதி வைத்தால் உடனே குணமாகிவிடும் எனவும் தெரிவித்தார்.
வேல் முருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சி

