இன்று இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் உடலுக்கு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு
தேனிசைத் தென்றல் தேவா அவரது 75 ஆவது வயதில் நேற்று (17) காலமானார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றம் சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் பூதவுடன் இன்று (18) பகல் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் மாங்காடு கிராமத்துக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி மரியாதை
மேலும் அவர் இசை உலகுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இயக்குநர் பி.வாசு ஆகியோர் இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |