ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடிய எலான் மஸ்க்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளர் க்ளென் கிரீன்வால்ட் ஒக்டோபர் 1 செய்த டுவிட் பதிவு ஒன்றிற்கு எலான் மஸ்க் பதில் ட்வீட் செய்த போதே இவ்விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த பத்திரிகையாளரின் டுவிட் பதிவில், கனடா அரசாங்கம் உலகில் மிகவும் அடக்குமுறையான ஒன்லைன் தணிக்கைச் சட்டங்களைச் செயல்படுத்துகிறது என்றும், பாட்காஸ்ட்களை வழங்கும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ட்ரூடோ அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக Green Vault வெளிப்படுத்தியுள்ளது என்றும், இதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்ரூடோ அரசாங்கம்
இந்நிலையில் இதற்கு பதில் டுவிட் செய்த மஸ்க், கனடாவில் பேச்சு சுதந்திரத்தை நசுக்க ட்ரூடோ அரசாங்கம் முயற்சிக்கிறது, இது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
Trudeau is trying to crush free speech in Canada. Shameful. https://t.co/oHFFvyBGxu
— Elon Musk (@elonmusk) October 1, 2023
ட்ரூடோவின் அரசாங்கம் பேச்சுரிமைக்கு எதிராகச் செயல்படுவதாகக் கண்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.