'தேமதுர தமிழோசை உலகமெங்கும் பரவட்டும்' - யாழில் இடம்பெறவுள்ள முத்தமிழ் விழா
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டிலும் ஐபிசி தமிழின் அனுசரணையிலும் முத்தமிழ் விழா - 2023 இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் முத்தமிழ் விழா - 2023 இடம்பெறவுள்ளது.
“தேமதுர தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு முத்தமிழ் விழா இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும் ஐபிசி தமிழ் ஊடகக்குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இயல், இசை, நாடகத்துறையில் பெரும் பங்காற்றியவர்களுக்கு யாழ். மாநகர சபையின் உயரிய விருதான அரசகேசரி விருதும் இதன்போது வழங்கப்படவுள்ளது.
முத்தமிழ் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளதால், விழா 29 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முத்தமிழ் விழாவில் அனைவரையும் பங்கேற்குமாறு யாழ் மாநகர சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
