மீண்டும் தாய்லாந்து நோக்கி பறந்தது முத்துராஜா
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட "முத்துராஜா " யானை இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)இருந்து தனது சொந்த நாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு தாய்லாந்து அரச குடும்பத்தால் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பரிசாக " முத்துராஜா " யானை வழங்கப்பட்டது, பின்னர் குறித்த யானையானது "அழுத்தகம கந்தே விஹாரைக்கு" ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு யானைகளில் ஒன்று

குறித்த யானையானது தாய்லாந்து அரசினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்று ஆகும்.
யானை உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் அதன் சிகிச்சை தொடர்பில் ஆராய்ந்தவேளை யானைக்கு பொறுப்பாக இருந்த பாகனின் கவனக்குறைவால் யானைக்கு உடல்நிலை ஏற்பட்டமை தெரியவந்தது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில்

எனவே, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர், முத்துராஜாவை கந்தே விகாரையில் இருந்து அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைத்தார்.
எனினும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததன் காரணத்தால், போதுமான சிகிச்சையை அவர்களால் வழங்க முடியவில்லை, மேலும் மருத்துவ சிகிச்சைக்காக யானையை மீண்டும் தாய்லாந்திற்கு அழைத்துச் செல்ல தாய்லாந்து அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு

இதன் நிமித்தம் முத்துராஜா யானை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ரஷ்யாவின் "இலியுஷின் ரக சரக்கு விமானத்தில்" இன்று காலை தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
படங்கள் - Daily Mirror