முல்லைத்தீவில் கரையொதிங்கிய மியன்மார் படகு : ஆரம்பமான முதற்கட்ட விசாரணை
முல்லைத்தீவு கடற்பரப்பில் 115 நபர்களுடன் கரையொதுங்கிய மியான்மார் படகின் ஓட்டுனர் உள்ளிட்ட 12 பேரிடம் ஆட்கடத்தல் எனும் பெயரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக .
சிறுவர்கள், பெண்கள் என உள்ளடங்களாக குறித்த படகானது நேற்று (19) முல்லை தீவு பகுதியில் கரையொதுங்கியது.
இந்தநிலையில் படகிலுள்ள அனைவரும், திருக்கோணமலை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
இதையடுத்து, விசாரணைக்கு உட்படுத்தப்படும் 12 பேரை தவிர்த்து ஏனைய 103 நபர்களையும் மாவட்ட செயலகம் ஊடாக திருகோணமலை தி/ஜமாலியா வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் 120 நபர்கள் பயணித்திருந்த நிலையில் அதில் ஐவர் நடுக்கடலில் வைத்து உயிரிழந்தமையால் அவர்களை கடலில் வீசியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளதுடன் இவர்கள் இலங்கைக்கு வரும் எண்ணத்தில் பயணிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |