மியான்மரில் அவசரநிலை மேலும் நீடிப்பு
மியான்மாரில் இராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, நேற்றுடன்(01) காலாவதியானதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை இராணுவம் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று கலைத்தது.
சிறை வைக்கப்பட்ட ஆங் சான் சூகி
இதேவேளை ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறை வைக்கப்பட்டதுடன் இராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த போராட்டங்களை இராணுவம் தடுத்தது.
இருப்பினும், அண்மைக் காலமாக, பல்வேறு பழங்குடியின கிளா்ச்சிப் படையினா் மியான்மர் பகுதிகளைக் கைப்பற்றி வரும் சூழலில் இந்த அவசரநிலை நீடிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |