மயிலத்தமடுவில் 160 நாட்களுக்கு மேலாக தொடரும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம்

Sri Lankan Tamils Batticaloa Dr Wijeyadasa Rajapakshe SL Protest
By Sathangani Feb 27, 2024 09:39 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாகவும், தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பாற்பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்ததால் கால்நடைகள் குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிக்கூட நிற்க முடியவில்லை. இது அநியாயம் தானே? வாய்பேச முடியாத மிருகம் தானே? இது மின்சாரக் கம்பியா? இல்லையா என இதுக்கு தெரியுமா?

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் 

பௌத்த தர்மத்தை மதிக்கும் அனைவரும் பாருங்கள். வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்கிறீர்கள், சுடுகிறீர்கள், வாய் வெடியை போடுகிறீர்கள், கட்டுத் துப்பாக்கியை கட்டுகிறீர்கள், வெட்டுகிறீர்கள், நீங்களா பௌத்த தர்மத்தை மதிப்பவர்கள்?” என பண்ணையாளர் ஒருவர் கவலை வெளியிடுகின்றார்.

மயிலத்தமடுவில் 160 நாட்களுக்கு மேலாக தொடரும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் | Myllaththamadu Farmers Protest Continue 5 Months

மயிலத்தமடு, மாதவனையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

விஜயதாச ராஜபக்ச சந்திக்கவில்லை 

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை நேற்று முன்தினம் (பெப்ரவரி 25) சந்திப்பதாக தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பாற்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் கரடியனாறு காவல்துறையில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

மயிலத்தமடுவில் 160 நாட்களுக்கு மேலாக தொடரும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் | Myllaththamadu Farmers Protest Continue 5 Months

குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டுகின்றார். மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்துகின்றார்.

சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் பாற்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! சம்பவ இடத்திலே இருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! சம்பவ இடத்திலே இருவர் பலி

கேள்விக்குறியாகியுள்ள வாழ்வாதாரம்

தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

மயிலத்தமடுவில் 160 நாட்களுக்கு மேலாக தொடரும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் | Myllaththamadu Farmers Protest Continue 5 Months

“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம் இது. இவர்கள் அத்துமீறி குடியேறியமையால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும் என இதோடு என்னுடைய 15 மாடுகள் இவ்வாறு இறந்து கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம். இவர்கள் வந்ததால்தான் இந்த அழிவு கூட“  என தெரிவித்தார்.

இதேவேளை மயிலத்தமடு, மாதவனையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பாற்பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றன.

இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பாற்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

மாதகல் விகாரைக்கு அருகில் கடற்றொழிலுக்கு கடற்படையினர் தடை

மாதகல் விகாரைக்கு அருகில் கடற்றொழிலுக்கு கடற்படையினர் தடை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024