யாழ் நகரை பரபரப்பாகிய மர்மப் பெட்டி! வெடிகுண்டு அச்சத்தில் மக்கள்
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது.
ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இயந்திர சாவிகள்
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது.
இதனையடுத்து காவல்துறையினர் குறித்த பெட்டியை அங்கிருந்து கொண்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்