உணவகத்திற்குள் கோடாரியுடன் புகுந்த மர்ம நபர் - வாடிக்கையாளர்கள் மீது கோர தாக்குதல்
New Zealand
Crime
By pavan
நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் கோடாரியுடன் புகுந்த நபர் அங்குள்ளவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(19) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
