சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் - கனேடிய பிரதமர் வெளியிட்ட தகவல்
Shooting
Justin Trudeau
Canada
By Sumithiran
கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் அமெரிக்க விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அந்த மர்ம பொருள் ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ.
இதன்படி கனேடிய மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய காரணத்தால் குறித்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கனேடியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

யுகொன் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனேடியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்திற் கொண்டே குறித்த மர்மபொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி