மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்!!
வரலாறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பேரினவாத அரசும் அதன் ஆதரவாளர்களும் தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை அடக்கும் செயற்பாடுகளை இன்றும் கைவிட்டபாடில்லை.
அவ்வாறு தான் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மனித உரிமை சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (Nadarajah Raviraj) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு முதல் நாளான கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினர் வாகரை மீது நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடராஜா ரவிராஜ் பங்கேற்றிருந்தார்.
அதன்பின்னர் அடுத்த நாளான நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இன்று போலொரு நாளில் காலை சிங்கள தொலைக்காட்சியொன்றில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி, நேர்காணல் ஒன்றை வழங்கிவிட்டு திரும்பிய நடராஜா ரவிராஜ், காலை 8.45 அளவில் கொழும்பு நாராஹென்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறான பிண்ணணியில் நடராஜா ரவிராஜின் படுகொலைக்கு பிள்ளையான் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக பிரபல புலனாய்வுத்துறை ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் கொழும்பின் தமிழ் வர்த்தகர்களிடம் கடற்படை மற்றும் ராணுவ படையைச் சேர்ந்த கும்பல்கள் கப்பம் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள் தொடர்பில் அவர் சட்டத்தரணியான நடராஜா ரவிராஜ் தகவல்களை திரட்டி இருந்தார் என கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
