கொலை சதி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நாலக டி சில்வா : நீதிமன்ற உத்தரவு!
சிறிலங்காவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நாலக டி சில்வாவுக்கு எதிராக கடந்த 2019 தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ச ஆகியோரை கொல்ல சதி செய்ததாக கடந்த 2019 இல் நாலக டி சில்வாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபரை குறித்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |