நல்லூர் கந்தனின் சூரசம்ஹார நிகழ்வு(படங்கள்)
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் யாழ்ப்பாணம் - தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்றையதினம்(18) சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த திங்கட்கிழமை (13) ஆரம்பமாகிய நிலையில் ஆறாவது நாளான நேற்று(18) சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
சூரசம்ஹாரம்
இதேவேளை, வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயம்,வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயங்களிலும் மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்டே சூரசம்ஹாரம் ஆலயங்களில் நடைபெற்று முடிந்தமையடுத்து இறுதி நாளான இன்று(19) திரு கல்யாண நிகழ்வு நடைபெற்று கந்தசஷ்டி விரதம் நிறைவடையும்.
தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |