வினை தீர்க்கும் வேலவனிற்கு இன்று 13 ஆம் நாள் திருவிழா (நேரலை)
நல்லூர் பதியமர்ந்து பக்த கோடிகளுக்கு அருள்பாலித்து வினைதீர்க்கும் வேலவன் 25 நாள் விழாக்கோலம் பூண்டுள்ளார். இது இலங்கை மாத்திரமன்றி கடல் கடந்து வாழும் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் இனம் புரியாத உணர்வு பிரவாகித்து வருகிறது.
விழாக்கோலம் கொண்ட வேலவனை, யாழில் மட்டுமல்ல, வெளி மாவட்டம் மற்றும் புலம்பெயர் தேசத்தில் வேரூன்றி விளைந்திருக்கும் எம் தமிழ் உறவுகளும் நல்லூரானுக்கென இந்த இருபத்தைந்து நாட்களும் விரதம் நோற்று முருகப்பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்வர்.
கடந்த மாதம் 21ஆம் திகதி விழாக்கோலம் பூண்ட வேலவனிற்கு இன்று (02) 13ஆம் நாள் மகோற்சவப் பெருவிழா. காலை நேரப் பூஜையில் முருகப்பெருமானுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.
எம்பெருமான் நல்லூரான் தங்க மயில் வாகனதிலும் வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் உள்வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
அதன்பின் சிறப்பு பூஜைகளுடன் கந்தனுக்கு தோத்திரப்பாடல்கள் பாடி மேள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
நல்லூரானை தரிசனம் செய்து நன்மைகளைப் பெற்றிடுவோம்.