நல்லூர் திருவிழாவிற்கு சென்றவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
நல்லூர் கந்தசுவாமி ஆலய (Nallur Kandaswamy Temple) தேர்த்திருவிழாவிற்கு வருகை தந்தோருக்கு முக்கிய அறிவித்தலொன்றை யாழ். மாநகரசபை (Jaffna Municipal Council) விடுத்துள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த ஒகஸ்ட் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவானது கடந்த 1ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
நல்லூர் தேர் திருவிழா
இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கை சங்கிலி - 1, மோதிரம் -1, பணப்பைகள் - 9, கைக்கடிகாரங்கள் - 18, தேசிய அடையாள அட்டைகள் - 4, சாரதி அனுமதிப்பத்திரம் - 4, வங்கி அட்டைகள் - 4, திறப்புகள் - 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் செம்டெம்பர் (11) தொடக்கம் ஒக்டோபர் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |