ஆபத்தாகிறதா புனிதமான நல்லூர் ஆலய வளாகம்! திரைமறைவில் பெரும் இரகசியங்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவக விவகாரம் மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பாரிய பேசு பொருளாக உள்ளதுடன் சிலரால் அதற்கு மதசாயம் பூசுகின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.
புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை குறித்த பகுதியிலிருந்து அகற்றுமாறு பல்வேறு அமைப்புக்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநகர சபை அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த அசைவ உணவகத்தின் அனுமதி மற்றும் பின்னணியில் திரைமறைவில் நடைபெறும் ரகசிய நகர்வுகள் மர்மாக உள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் மௌனம் காப்பது ஏன் என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஈழத் தமிழர்களின் வாழ்வியலோடு கலாச்சாரத்தோடும் நேரடியாக தொடர்புடைய ஒரு பகுதியாகவும் உள்ள நல்லூர் ஆலயத்தின் சூழலில் நடைபெறுகின்ற அநியாயங்களை தட்டிக் கேட்காது கடந்து செல்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விடயம் அல்ல .
இதேவேளை பேச வேண்டிய விடயங்களுக்கு பேசாமல் அமைதி காப்பது என்பது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு அங்கமாகவே தோன்றுகிறது. திரைமறைவில் நடக்கும் ரகசியங்கள் குறித்து ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
