சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச
புதிய இணைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து (CID) வெளியேறியுள்ளார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் செய்த விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்
இந்த விவகாரம் தொடர்பாக 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் சிஐடி வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சற்றுமுன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காகவே அவர் திணைக்களத்தில் முன்னிலையான வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தை விசாரித்து வருகின்றது.
குற்றப் புலனாய்வுத் துறை
இதற்கிடையில், ஜே.வி.பி உறுப்பினர்களின் சில அறிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்திருந்தார்.
கொழும்பில் (Colombo) நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 8 மணி நேரம் முன்
