பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாளையதினம்(27) மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக முன்னரே அந்தந்த மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்திருந்தன.
விசேட விடுமுறை
இதன்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளையதினம்(27.02.2025) இடம்பெறவேண்டிய கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்துள்ளன.

நூற்றுக்கணக்கான வருடம் கழித்து மகா சிவராத்திரியில் நிகழவுள்ள அதிசயம் : அதிஷ்டம் காணபோகும் 3 நட்சத்திரங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 6 மணி நேரம் முன்
