வற் வரி தொடர்பில் வெளியான புதிய தகவல்
2024 ஆம் ஆண்டு முதல் பத்து மாதங்களில் வற் வரியின் மூலம் அரசாங்க வருவாய் 86.8 சதவீதம் அதிகரித்து ரூ.1,067.4 பில்லியனாக பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வற் வரியால் சேகரிக்கப்பட்ட ரூ. 571.5 பில்லியன் அரசாங்க வருவாய், 2024 இல் ரூ. 495.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உள்நாட்டு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட வற் வரி வருவாய் 48.4 சதவீதம் அதிகரித்து ரூ. 585.5 பில்லியனாக பதிவாகியுள்ளது.
வற் வரி அதிகரிப்பு
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதிகளிலிருந்து கிடைத்துள்ள வற் வரி வருவாய் 172.5 சதவீதம் அதிகரித்து ரூ.481.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வற் வரி 15 வீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டமையானது, வருவாய் அதிகரிப்பதற்கான முக்கியகாரணமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 1 மணி நேரம் முன்
