இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல்
ஒடிசாவிலுள்ள கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் (KIIT University, Odisha) நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல் ராஜபக்சவுக்கு சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச திறந்த வாகனத்தில் பொது மக்கள் பார்வைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறப்புரையாற்றிய நாமல்
அதன் பின்னர் நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார்.

ஆனால் இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கத்தில் எவ்வித இராஜதந்திர அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரா கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன மற்றும் முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான இந்திகா அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன, சம்பத் அதுகோரல மற்றும் பொதுஜன பெரமுன அரசியல் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |