அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய நாமல்
வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எதிராக முகப்புத்தக பதிவுகளுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பயன்படுத்தப்படுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்கப் பயன்படுத்தாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) நாடாளுமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்தே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்தால், வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இளைஞர்களின் முகநூல் பதிவுகள் மற்றும் சிறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது நியாயமா என்று அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில் “இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக மக்களுக்கு உறுதியளித்தது.
மேலும் இந்தச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
அரசாங்கத்தின் இரட்டை நிலை
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான சட்டத்தை எங்கள் கட்சியின் கொள்கை ஆதரிக்கிறது, மேலும் நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாக இருக்கிறோம்.
செம்மறி ஆட்டுத் தோலுக்குள் இருக்கும் புலி போன்று மற்றவர்களைப் போலல்லாமல், நாங்கள் ஒருபோதும் எங்கள் நோக்கங்களை மறைக்கவில்லை.
அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலை அணுகுமுறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் உண்மையிலேயே எதை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது,”என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்