கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டம்! கொந்தளித்த நாமல்
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை (Colombo) ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களை அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக்கியவர்கள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகின்றனர்.
அக்கிரமங்கள்
அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, நல்லாட்சி அரசாங்கத்தில் அன்று எங்களை சிறையில் அடைத்தனர்.
அப்போது களுத்துறையில் (Kalutara) உள்ள ஒரு அரசியல்வாதி ஒருவர் அதற்கெதிராக குரல் கொடுத்தார்.
எங்களுக்கு நடந்த அநீதி அக்கிரமங்கள் இன்னொருவருக்கு நடக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது அதெற்கெதிராக போராடுவோம்.
பொருளாதார நெருக்கடி
எங்களுக்கு அது கெடுதென்றால்,அவர்களுக்கு எவ்வாறு நன்மையாகும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவர் என வெளிநாட்டினர் குறிப்பிடுகையில் நம்மவர்களுக்கு தெரியவில்லை.
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 6 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்