மின்வெட்டில் மறைமுக சதி! நாமலுக்கு ஏற்பட்ட சந்தேகம்
sri lanka
power cut
namal rajapaksa
By Thavathevan
போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டால் மின்வெட்டு இருக்காதென தெரிவிக்கப்பட்டு, பின்னர் மின்வெட்டு தொடர்ந்தால் அதன் அர்த்தம் பிரச்சினை ஏதோ உள்ளதென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது மறைமுக சதியாக கூடயிருக்கலாம், அதனைக் கண்டறிய வேண்டும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இடம்பெறாது என அரச தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவது சிக்கலுக்குரியது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் ஒரு சதி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி