வடக்கு - கிழக்கை நோக்கி வரப்போகும் நாமலின் கிராமத்திற்கு கிராமம்
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள "நாமலுடன் கிராமத்திற்கு கிராமம்" வேலைத்திட்டம் நாளை (01) தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்க பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நாளை (02) முற்பகல் மத வழிபாடுகள் மற்றும் சடங்குகள் நடத்திய பிறகு இந்த நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வேலைத்திட்டத்தின் நோக்கம்
முதலாவதாக குறித்த வேலைத்திட்டமானது, நொச்சியாகம பகுதியில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தின் போது, தற்போதைய அரசியல் நிலைமை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று முக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |