மொட்டுவின் அதிபர் வேட்பாளர் : நிபந்தனை விதிக்கும் நாமல்
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Jaso
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நிபந்தனைகளை விதித்துள்ளார் .
இதன்படி சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிபர் வேட்பாளரை நியமித்தால், அது பெரமுனவின் கொள்கைகளை நிலைநிறுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரமுன கூட்டணி அமைக்காது
வாக்குகளுக்காக மட்டுமே கட்சியின் ஆதரவைப் பெற்று பிரிந்து செல்லும் நபர்களுடன் பெரமுன கூட்டணி அமைக்காது என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வெற்றிபெற முடியாது என கருதும் எந்தவொரு பிரிவினரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்