நாளை நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ள நாமல்! சிறைச்சாலை ஆணையாளரை சென்றடைந்த கடிதம்
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதில் வழங்கியுள்ளார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச
இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முன்னதாக அனுமதி கோரியிருந்தார்.
எழுத்துபூர் கோரிக்கை
இந்த கோரிக்கையானது சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என முன்னதாக கூறப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |