அநுராதபுரம் பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மகிந்த : மொட்டுக்கட்சி அறிவிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சரும் கட்சியின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி மேடைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்கள் பேரணியில் கலந்து கொண்டாலும், அவர் பொது மேடையில் ஏறி மக்களிடையே உரையாற்றுவதைத் தவிர்த்துவிட்டு ,மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு அமர்வில் இருந்து கொண்டு பேரணியில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
கடந்த வெள்ளிக்கிழமையன்று (04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |