மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு நாமல் வலியுறுத்து!
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்று (25.10.2025) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர்
அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரியதாகவும், ஆனால் அது வழங்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவரது கடந்த கால நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு கொலையை மறைக்கும் வகையில் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆற்றிய உரை தொடர்பில் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்