பலத்த பாதுகாப்புடன் முதல் தடவையாக வெளியே வந்த நாமல்!!
கடந்த மே மாதம் 09ம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச நேற்று வெளியேவந்துள்ளார்.
கடந்த மே மாதம் 09ம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் பொதுவௌியில் பகிரங்கமாக நடமாடிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்
சேதமாக்கப்பட்ட தமது ஆதரவாளர்களின் வீடுகளை நேரில் சென்று பார்வை
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று சேதமாக்கப்பட்ட தமது ஆதரவாளர்களின் வீடுகளின் பார்வையிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது சேதமாக்கப்பட்ட தமது ஆதரவாளர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளையே நாமல் ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஷானகவும் நாமலுடன்
நாமல் ராஜபக்சவின் இந்த விஜயத்தில் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரும் முன்னாள் அமைச்சருமான டீ.வி. ஷானகவும் இணைந்து கொண்டிருந்தார்.
நாமல் ராஜபக்சவின் இந்த விஜயத்தின் போது ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக அவருடன் சென்றிருந்தததுடன், அவ்வப்பிரதேச காவல்துறையினர் ஊடாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
