இந்தியாவிற்கு பயணமாகும் நாமல் உள்ளிட்ட குழுவினர்
இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒடிஷா மாநிலத்திற்குப் பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது.
ஒடிசா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
இந்த நிலையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள குழுவினர் உலகில் மிகச் சிறந்த அனர்த்த முகாமைத்துவ நிலையமாகக் கருதப்படும் ஒடிசா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் செல்லவுள்ளனர்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது விஜயன் காலத்திற்குரிய பௌத்த தொல்பொருட்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சுற்றப்பயணம் தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |