தாஜுதீனின் ஆன்மாவுக்கு இழைக்கும் அநீதி.! அரசாங்கத்திடம் நாமல் விடுத்த கோரிக்கை
தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யப்படாவிட்டால் அது தற்போதைய அரசாங்கம் தாஜுதீனின் ஆன்மாவுக்கு இழைக்கும் அநீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (01.10) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபம்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ தற்போது உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொய்யான சாட்சியங்களை உருவாக்கி அரசாங்கத்தை மகிழ்வித்து வருகிறது.
தாஜூதீன் விடயத்தை தத்தமது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தாமல் அரசாங்கம் பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பும் போது அவ்விடயத்தை முற்றிலுமாக மறைத்து மற்றுமொரு விடயத்தை மக்கள் மத்தியில் அரசாங்கம் திணிக்கிறது.
ஆகவே, தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம்” என தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கூட ராஜபக்சர்களுக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
