சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!
லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்களின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தன்று (15.01.2026) தெகிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் “நம்மவர் பொங்கல்” விழா சிறப்பாக நடந்தேறியது.
தை பிறப்பை சிறப்பாக வரவேற்கும் முகமாக பல கலை, கலாசார நிகழ்வுகளுடன் “நம்மவர் பொங்கல் விழா” வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
நிகழ்வுக்கான பிரதான அனுசரணையை IDM தனியார் பல்கலைக்கழகம் வழங்கியிருந்ததுடன், இணை அனுசரனையாளர்களாக Little Lion மற்றும் Fadna நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன.
குறிப்பாக, தெஹிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம் இந்த நிகழ்வுக்கு பாரிய உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கியிருந்தது.
ஐபிசி தமிழ் லங்காசிறி ஊடகம் சார்பில் தெஹிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம் மற்றும் தேவஸ்தான நிர்வாகத்தினரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


