வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கத்திக் குத்து - ஒருவர் படுகாயம்
Nuwara Eliya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Pradheepan
நானுஓயா பிரதான நகரில் இன்று திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தகநிலையம் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் குறித்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் இருவர் எனவும், இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா காவல் நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.