விண்வெளியிலிருந்து 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்!
நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் கடந்த 2021, ஏப்ரல் 09 ஆம் திகதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்.
இவர் அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து வேலை செய்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது.
கஜகஸ்தானில் ரஷ்ய விண்வெளி காப்ஸ்யூலில் இன்று பூமிக்கு திரும்பியுள்ளார். அவர் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது.
அத்தோடு அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்கு திரும்பியுள்ளனர். பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
