வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்
பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தை நட்சத்திரக்கூட்டங்கள் உருவாக்கி இருப்பதை நாசா படம் பிடித்து பகிர்ந்துள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரா கண்காணிப்பகம் படம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம்
அத்தோடு, நமது பால்வழி அண்டத்தில் சூரிய குடும்பத்துக்கு அடுத்தப்படியாக பச்சை நிறத்தில் இந்த விண்மீன் திரண்டு காட்சியளித்துள்ளன.
It's beginning to look a lot like cosmos. ?
— NASA (@NASA) December 19, 2023
Our @ChandraXray Observatory recently spotted the blue-and-white lights that decorate the "Christmas Tree Cluster," a swarm of stars and gas some 2,500 light-years from Earth: https://t.co/VT2WaLgp77 pic.twitter.com/HrnrmxRyd7
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், இந்த வியப்பூட்டும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நட்சத்திரங்களின் வயது
மேலும், இந்த NGC 2264 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய விண்மின் திரள்களில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஒன்று முதல் 5 கோடி ஆண்டுகள் வரை வயது இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவற்றின் எடை சூரியனின் எடையில் பத்தில் ஒரு பங்கிற்கு குறைவானதாகவும் ஒரு சில சூரியனின் எடையை விட ஏழு மடங்கு அதிகமாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |