நனவாகியது தமிழக வீரர் நடராஜனின் நெடுநாள் கனவு..!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனின் துடுப்பாட்ட மைதானத்தை, இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் தினேஷ் கார்த்திக் திறந்துவைக்க உள்ளார்.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் நடராஜன் அறிமுகமாகி இருந்தார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இவர் 'நடராஜன் துடுப்பாட்ட மைதானம்' எனும் பெயரில் தனது துடுப்பாட்ட மைதானத்தை வடிவமைத்துள்ளார்.
திறப்பு விழா
இம் மாதம் 23ஆம் திகதி இந்த மைதானம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் திறப்பு விழா குறித்து நடராஜன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Extremely delighted to announce the opening of my dream-come-true project- Natarajan Cricket Ground.
— Natarajan (@Natarajan_91) June 10, 2023
- 23rd of June, 2023
- Chinnappampatti, Salem District pic.twitter.com/Mj4yRswYuz
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் துடுப்பாட்ட மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.' என கூறியுள்ளார்.
