இலங்கையில் எய்ட்ஸ் பாதிப்பு ஏழு மடங்காக அதிகரிப்பு
By Mathu
நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அறிவித்துள்ளது.
பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இவ்வாறான பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
புதிய நோயாளர்கள்

2023 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதான பத்திரன தெரிவித்தார்.
அவர் மேலும்தெரிவிக்கையில், "கடந்த வருடத்தில் மொத்தம் 678 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது அதற்கு முன்னைய ஆண்டை காட்டிலும் 44 சதவீதம் அதிகம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.